ரிசானாவுக்கு கருணை காட்டுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சவூதி பெற்றோருக்கு மனு

04/11/2010 15:02

 

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூதூர் யுவதியான ரிஸானா நபீக்கிற்கு மன்னிப்பு வழங்குமாறு கருணை மனுவொன்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சம்மந்தப்பட்ட சவூதி குழந்தையின் பெற்றோருக்கு சமர்ப்பித்துள்ளது.
ஸ்ரீலங்காவில் உள்ள சவுதி அரேபிய தூதுவர் அப்துல் அஸீஸ் அல் ஜம்மாஸை கொழும்பில் உள்ள தூதரகத்தில் சந்தித்த கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த கருணை மனுவை கையளித்துள்ளார்.

 

இந்த நிலையில் சவூதி மன்னருக்கு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அனுப்பிவைத்துள்ள கடிதமானது இலங்கை மக்களுக்கு பெரும் நம்பிக்கையையும் ஆறுதலையும் அளிப்பதாக ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் தமது இந்த கருணை மனு ரிசானா நபீக்கின் தண்டனைக்குறைப்புக்கு உதவும் என தாம் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்வின்.காம்

இஸ்லாமிய சட்டப்படி பாதிக்கப்பட்ட நபர் மன்னிகக்காதவரை நீதிமன்றமோ அரசோ தண்டனை வழங்குவதில் குறிக்கிட முடியாது ஆதலால் இந்தக் கடிதம் சம்மந்தப்பட்ட பெற்றோருக்கு அனுப்பப்பட்டள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.