வடகொரியா மற்றும் தென் கொரிய நாடுகளில் போர் பதற்றம்

25/11/2010 10:20

கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வடகொரியா, தென்கொரியாவில் உள்ள இயான் பியாங் தீவில் ஏவுகனை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 5 கட்டிடங்கள் நேரடி தாக்குதலில் சேதமமைந்துள்ளன மேலும் 22 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

தமடைந்த கட்டிங்களிடையே இரு உடல்கள் கிடைத்துள்ளன.  அத்தீவில் உள்ளவர்கள் பாதுகாப்பாக  வேறு இடத்திற்கு அனுப்பபட்டனர். செவ்வாய்கிழமை நடந்த தாக்குதலில்  இரண்டு பேர் இறந்துள்ளனர். 15 க்கும் மேற்பட்ட தென்கொரிய ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

 

 

இந்த தாக்குதலால் தென்கொரியா முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பதில் தாக்குதலில்   தென்கொரியா ஈடுபட்டது.

வடகொரியாவின் ஏவுகனை தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் உலக நாடுகள்  கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
 
இந்த தாக்குதல் பற்றி அமெரிக்கா தெரிவிக்கையில் தென்கொரியாவுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Nakkheeran.in