வாத நோயை வதம் செய்யும் கோவைக்கிழங்கு

22/10/2012 09:24

 

Meditional Benefits Kovaikizhangu Aid0174சர்க்கரை நோயாளிகள் அதிகம் உண்ணும் கோவைக்காயானது எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த காயைப்போல கோவைக்கிழங்கும் சாப்பிட உகந்தது. இக்கிழங்கில் நான்கு வகைகள் உள்ளன. அவை கருங்கோவை, மூவிரல் கோவை, நாமக்கோவை, ஐவிரல் கோவை ஆகும். இவை அனைத்துமே மருத்துவப் பயன் கொண்டவையாகும். இவற்றுள் சில இனிப்புச்சுவையுடன் இருக்கும். அது குளிர்ச்சியை தரவல்லது. கசப்பு சுவையுடன் இருக்கக் கூடிய கோவைக்கிழங்கு வெப்பத்தை தரக்கூடியது.

ஜீரண சக்தி தரும்

இனிப்புள்ள கோவைக்கிழங்கு வற்றலாக வறுத்துச்சாப்பிட ருசியாக இருக்கும். இது மலச்சிக்கலை போக்கும் தன்மையுடையது. குடல் சுழற்சிகளைப் போக்குவதோடு ஜீரண சக்தியையும் எளிதாக்கும். இது உடலுக்கு வலிமை தரும்.

நீரிழிவுக்கு மருந்து

கோவைக் கிழங்கை காயவைத்து இடித்து தூளாக்கி வைத்துக்கொள்ளவேண்டும். சிறிதளவு தூளுடன் காய்ச்சிய பாலை கலந்து சாப்பிட சிறுநீர் தாரளமாக பிரியும். நீரிழிவு நோய் தணியும்.

வாதநோய்

பக்கவாதநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து இக்கிழங்கின் சூரணத்தை சாப்பிட்டு வர பூரண குணமாகும். பித்தம் மற்றும் கபம் நோய்களுக்கும் இது கண்கண்ட மருந்தாகும். மேலும் தோல் தொடர்புடைய அனைத்து நோய்களையும் இது குணமாக்கும்.

 


Make a website for free Webnode