விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க தூதரக உளவு வேலை: இந்தியா கருத்து

29/11/2010 16:08

விக்கிலீக்ஸ் வெளியிட்ட சர்ச்சைக்குரிய தகவல்கள் குறித்த விவகாரத்தில் பொறுத்திருந்து செயல்படுவோம் என்று இந்தியா அறிவித்துள்ளது.

 

dinamani.com

 

 

 

இத்தகவலை வெளியுறவுத்துறை இணையமைச்சர் ப்ரிநீத் கெளர் இன்று தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

 

ஐநா சபை மற்றும் பல நாடுகளின் தலைவர்களை அமெரிக்கத் தூதரகங்கள் உளவு பார்ப்பது குறித்து விக்கிலீக்ஸ் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ப்ரிநீத் கெளரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது இவ்வாறு கூறினார்.

 

 

"விக்கிலீக்ஸ் தகவல்கள் மிகவும் உணர்வுப்பூர்வமானவை. அமெரிக்காவுடன் இந்தியாவுக்கு மிகச்சிறந்த உறவு உள்ளது. வி்க்கிலீக்ஸ் ஆவணங்கள் குறித்து அவர்கள் ஏற்கெனவே இந்தியாவை எச்சரித்திருந்தனர். எனவே, கருத்து கூற இது சரியான நேரமில்லை. அமெரிக்காவுடன் நமது நட்பு மேலும் தொடர விரும்புகிறோம். எனவே, நாம் பொறுத்திருந்து என்ன செய்யலாம் என்பது குறித்து முடிவு எடுப்போம்." என்றார் ப்ரிநீத் கெளர்.