வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஓட்டு போடலாம்

25/11/2010 09:51

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், இந்தியாவில் நடக்கும் தேர்தல்களில் ஓட்டுப் போட வழிவகை செய்யும் மசோதா கடந்த மழை கால பாராளுமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கான அரசு ஆணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
 

 


இந்த தகவலை, வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதுதொடர்பாக வயலார் ரவி மேலும் கூறுகையில், வெளிநாட்டுக்கு வேலையின் நிமித்தமாக சென்று, குடி உரிமை பெறாமல், அங்கேயே வாழும் இந்தியர்கள், இந்தியாவுக்கு தேர்தல் நாளில் வந்து ஓட்டு அளிக்கலாம் என்று குறிப்பிட்டார்.


வெளிநாடுகளில், இந்தியர்கள் ஒரு கோடியே 10 லட்சம் பேர் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

nakkheeran.in