இந்தோனேசியாவில் மகளிர் மட்டும் சிறப்பு ரயில் அறிமுகம்

02/10/2012 09:22

 

நெரிசல் மிகுந்த ரயில் தடங்களில் மகளிருக்கான பிரத்யேக ரயில்களை இந்தோனேசிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
 
மகளிர் சிறப்பு ரயில்

மகளிர் சிறப்பு ரயில்

 

 

 

 

 

 

 

 

பொது ரயில்களில் பயணிக்கும் பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாவதாக எழுந்த புகார்களால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வேலை நாட்களில் தலைநகர் ஜகார்த்தாவுக்கும் தெற்கேயுள்ள போகாருக்கும் இடையே 8 சிறப்பு ரயில்கள் விடப்படும்.

இளஞ்சிவப்பு நிற பேனர்கள் மற்றும் சின்னங்களுடன் இந்த ரயில்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து நெரிசல் மிகவும் அதிகமாக இருக்கும் நேரத்தில் ரயில்களில் பிராயணம் செய்யவது பாதுகாப்பாக இல்லை என்று இந்தோனேசியப் பெண்கள் புகார் கூறியிருந்தனர்.

ரயில்களில் பெண்களுக்காக சில பெட்டிகளை ஒதுக்கும் நடைமுறை இரு ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது.

ஆனால் அது போதுமானதாக இல்லை என்று சில பிரயாணிகள் கருதுகின்றனர்.

 


Make a free website Webnode