ஏசு முஸ்லீமாக இருந்தாரா? அமெரிக்கா மத பேராசிரியரின் புத்தகம்

27/07/2012 11:19

அமெரிக்காவின் லோவா பகுதியில் உள்ள லூதர் கல்லூரியில் மதப் பேராசிரியராக பணியாற்றி வரும் ராபர்ட் செடிங்கர் என்பவர் தமது கல்லூரியில் இஸ்லாம் குறித்து பாடம் நடத்தி வந்தவர். அவரின் மாணவியான ஒருவர் முஸ்லீம் குடும்பத்தரால் வளர்க்கப்பட்டவர். ராபர்ட்டின் இஸ்லாம் குறித்த கருத்துக்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ளார். அதன் விளைவு அவரது இஸ்லாம் குறித்த சிந்தனையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்லாத்தை தீவிரமாக ஆய்வு செய்த அவர் தற்போது ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

 

அதில் மிக அழுத்தமாக இஸ்லாத்திற்கும் கிருஸ்தவத்திற்கும் உள்ள தொடர்பை மையமாக வைத்து திருக் குர்ஆன் ஏசு பற்றி சொல்லும் கருத்துக்களை ஆதாரமாக வைத்து அவரது ஆய்வை மக்களுக்கு முன் ஒரு புத்தகமாக வைத்துள்ளார்.

 

அவரது அழுத்தமான கருத்து என்ன வென்றால் ஏசு ஒரு முஸ்லீமாக இருந்தார். அவரும் முஹம்மது (ஸல்) அவர்களைப் போன்ற ஒரு தூதர் என்று அதில் வாதிடுகிறார். அவரது மாணவர்களுக்கும் இதை போதித்துள்ளார்.

 

இது குறித்து மேலைநாடுகளில் பெரும் சர்ச்சை ஏற்பட்டு இருந்தாலும். பலரை யோசிக்க வைத்துள்ளது என்பது என்னவோ உண்மை.

https://english.alarabiya.net/articles/2012/07/23/227956.html