பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு அப்போதைய பிரதமர் நரசிம்மராவும் காரணம் - குல்திப் நய்யார்
பாபர் மசூதி இடிப்பு விவகரத்தில் மத்தியில் ஆட்சி செய்த நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசிற்கும் பங்கு உள்ளது என முஸ்லீம் இயக்கங்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன. இந்நிலையில் பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட அன்று நரசிம்மராவ் பூஜையில் ஈடுபட்டு இருந்ததாகவும் பள்ளி இடித்து முடிக்கப்பட்ட செய்தி அறிந்து பூஜையை நிறுத்தியதாகவும் இதன் மூலம் பாபர் மசூதி இடிப்பில் மறைந்த முன்னால் பிரதமர் நரசிம்மராவிற்கு மறைமுகமாக தொடர்பு இருப்பதாகவும் தன்னுடைய ”Beyond the Line" என்ற சுய சரிதை புத்தகத்தில் மூத்த பத்திரிக்கையாளர்களில் ஒருவரான குல்திப் நய்யார் எழுதி இருக்கிறார். அந்த புத்தகம் விரைவில் வெளிவர இருக்கிறது.
மேலும் பாபர் மசூதி இடிப்பு மற்றும் அதற்குப் பிந்தைய பிரச்சனைகளில் மத்திய அரசின் மெத்தனப் போக்கு மற்றும் துணை ராணுவத்தினரின் கையாளாகாத தனம் உள்ளிட்ட அனைத்திற்கும் நரசிம்மராவிற்கும் தொடர்பு இருப்பதாக அந்த புத்தகத்தில் தெறிவித்துள்ளார். பாபர் மசூதி இடிப்பிற்குப் பிந்தைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவரது தடுமாற்றத்தை இதற்கு ஆதாரமாக சுட்டிக்காட்டி உள்ளார். இதற்கு முன் நரசிம்மராவ் இந்தியாவை ஒரு இந்து நாடாகவே கருதிவந்தார் என்ற ஒரு செய்தி சில மாதங்களுக்கு முன் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.